அஸ்வினி நட்சதிர பரிகாரவிருட்சம் எட்டிமரம் ஆகும். இந்த எட்டி மரத்துக்கும் அஸ்வினி நட்சதிரதிக்கும் என்ன சம்மந்தம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அமிர்தத்துடன் ஆலகாலவிஷமும் வெளிவந்தது, அந்த ஆலகால விஷத்தால் உலகே பாதிக்கும் என்று உணர்ந்த சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை தானே உட்கொண்டார். அந்த ஆலகால விஷத்தின் அடையாள சின்னம் தான் எட்டிமரம் ஆகும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அஸ்வினிதேவர்கள் ஆகும். அஸ்வினிதேவர்கள் எட்டிமரங்கள் நிறைந்த வனத்தில் தவம்புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
அஸ்வினி நட்சத்திரதில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திரப் பரிகாரவிருட்சமான எட்டிமரத்தை வணங்குவது மிகசிறந்த பரிகாரம் ஆகும். எட்டிமரத்தினை தலவிருட்சமாக கொண்ட திருத்தலங்களில் பரிகாரம் செய்துகொள்வது மிகவும் பலன்தரும். அவ்வகையில் எட்டியை தலவிருட்சமாக கொண்டது கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் ஆலயம் ஆகும்.மேலும் எங்கள் சர்வசக்தி விருட்சபீடத்தில் 27 நட்சத்திர பரிகார விருட்சங்களை நட்டு வளர்த்துவருகிறது. எல்லா நட்சத்திரக்காரர்களும் தங்களின் கர்மதோஷப்பரிகாரங்களை இங்கு செய்துகொள்ள உடனே பலன்தரும்.
மேலும் விருட்சபீடத்தில் உங்கள் நட்சத்திர விருட்சத்திற்கு நடத்தப்படும் பூஜைகளுக்கான நன்கொடை தரலாம், இதன் மூலம் ஒரு மண்டல காலத்துக்கு உங்களுக்காக சிறப்பு விருட்சபரிகார பூஜைகள் நடத்துகிறோம், இதன் பயனாய் சர்வதோஷங்களும் நீங்கும்.