Translate

புதன், 18 செப்டம்பர், 2013

நத்தைச்சூரி



                    எத்தைசொன்னாலும் அதை செய்யும் நத்தைச்சூரி என்பது சித்தர் வாக்கு, இது ஒரு ஆபூர்வ கிடைத்தற்கு அறிய சித்தர் மூலிகைகளில் ஒன்று. நானும் பல இனையதளங்களில் வெளியான  நத்தைச்சூரியின் படங்களை பார்த்தேன் அவை எதுவும் சரியான உண்மையான நத்தைசூரியின் படங்களே அல்ல.  எனவே மக்களின் உண்மை தேடலை பூர்த்தி செய்யும் விதமாகவே உண்மையான நத்தைச்சூரியின் படத்தையும், நத்தைச்சூரியின் உண்மை விளக்கத்தையும் எழுதினேன். நத்தைச்சூரியில் இரண்டு வகைகள் உண்டு. அவை நத்தைச்சூரி மற்றும் நத்தைவராளி , இவை ஆண் மற்றும் பெண் செடிகள் ஆகும் . நதைச்சூரியின் அருகில் ஒரு நத்தையை வைக்கும் போது அந்த செடி நத்தைச்சூரி என்றால் நத்தையும் ஓடும் தனித் தனியாக கழன்றுவிடும் . அதுவே நதைவராளி எனில் நத்தையின் ஓடு சில்லு சில்லாக உடையும். சித்தர்கள் பயன் படுத்தியது நதைச்சூரியே, நத்தைவராளி அல்ல.
                   நதைச்சூரியின் காய் நத்தை வடிவில் இரு கொம்புகளை கொண்டது. இலை ஒரு அங்குல நீளத்தில் அரை அங்குல அகலத்தில் வட்டமான சுனையுடன் அதில் முள்களும் இருக்கும். இது ஒரு குத்து செடி வகையாகும்.
                 நதைச்சூரியை வெள்ளி அல்லது தங்க தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ள நாம் செய்யும் அனைத்து காரியங்களும் உடனே வெற்றியாகும். தொழில் வியாபாரங்களின் மூலம் மிகப் பெரிய தன வசதிகளை உண்டாக்கும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகளை தரும்.