Translate

திங்கள், 24 ஜூன், 2013

அஸ்வினி நட்சத்திரமும் - எட்டி மரமும்

                                               


                     அஸ்வினி நட்சதிர பரிகாரவிருட்சம் எட்டிமரம் ஆகும். இந்த எட்டி மரத்துக்கும் அஸ்வினி நட்சதிரதிக்கும் என்ன சம்மந்தம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அமிர்தத்துடன் ஆலகாலவிஷமும் வெளிவந்தது, அந்த ஆலகால விஷத்தால் உலகே பாதிக்கும் என்று உணர்ந்த சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை தானே உட்கொண்டார். அந்த ஆலகால விஷத்தின் அடையாள சின்னம் தான் எட்டிமரம் ஆகும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அஸ்வினிதேவர்கள் ஆகும். அஸ்வினிதேவர்கள் எட்டிமரங்கள் நிறைந்த வனத்தில் தவம்புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
                 அஸ்வினி நட்சத்திரதில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திரப் பரிகாரவிருட்சமான எட்டிமரத்தை வணங்குவது மிகசிறந்த பரிகாரம் ஆகும். எட்டிமரத்தினை தலவிருட்சமாக கொண்ட திருத்தலங்களில் பரிகாரம் செய்துகொள்வது மிகவும் பலன்தரும். அவ்வகையில் எட்டியை தலவிருட்சமாக கொண்டது கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் ஆலயம் ஆகும்.மேலும் எங்கள் சர்வசக்தி விருட்சபீடத்தில் 27 நட்சத்திர பரிகார விருட்சங்களை நட்டு வளர்த்துவருகிறது. எல்லா நட்சத்திரக்காரர்களும் தங்களின் கர்மதோஷப்பரிகாரங்களை இங்கு செய்துகொள்ள உடனே பலன்தரும்.
                  மேலும் விருட்சபீடத்தில் உங்கள் நட்சத்திர விருட்சத்திற்கு நடத்தப்படும் பூஜைகளுக்கான நன்கொடை தரலாம், இதன் மூலம் ஒரு மண்டல காலத்துக்கு உங்களுக்காக சிறப்பு விருட்சபரிகார பூஜைகள் நடத்துகிறோம், இதன் பயனாய் சர்வதோஷங்களும் நீங்கும்.

சனி, 15 ஜூன், 2013

மனிதர் முதல் தெய்வம் வரை வசியம் செய்ய

        நல்லதொரு பூச நட்சத்திரத்தில் சந்தன மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புல்லுருவிக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பொங்கல் இட்டு திரும்பி வந்து அடுத்த நாள் காலையில்  சென்று தூப தீபம் காட்டி வெள்ளை சாவல் பலி கொடுத்து இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்கள், நகங்கள் பத்தும் படாமலும் எடுத்துவந்து சாறு பிழிந்து மண் சட்டியில் தடவி காயவைத்து,  அதன்பின் சந்தன வில்லையை பொன்ணாங்கண்ணி சாறு விட்டு குழைத்து மண் சட்டியில் பூசி காயவைத்து , அதன் மேல் புத்துதேனை பூசி , கற்பூரம் ஏற்றி புகையை மண்சட்டியில் பிடித்து சட்டியில் உள்ள மையை வழித்து டப்பாவில் பத்திரபடுத்தவும். வெளியில் செல்லும் போது வினாயகரை மனமாற வேண்டி பொட்டிட்டு கொண்டு போக தேவர் முதல் மனிதர்வரை அனைவரும் வசியமாவார்கள்.

வெள்ளி, 14 ஜூன், 2013

தெய்வீக விருட்சம் - ஆலமரம்

        ஆல மரம் :
                                   இந்த தெய்வீக சக்தி உடைய விருட்சம் சிவ பெருமானின் அம்சம் ஆகும். இந்த மரத்தில் இருந்து சாத்வீக கந்த அதிர்வுகள் வேளியறுகின்றன. இந்த விருட்சத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும். இந்த விருட்சம் ஆண்மையை அதிகரிக்க செய்யும். குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் இம்மரத்தை முறைப்படி பூஜித்து வணங்கினால் புத்திர பாக்கியம் உடனே கிடைக்கும். கணவன் - மனைவி சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யவும்.
                                    ஒரு வியாழக்கிழமையை தேர்வு செய்து அன்று சர்வ சக்தி விருட்ச பீடத்தில் உள்ள ஆல விருட்சதிக்கு புத்திர தோஷ பரிகாரம் செய்யவும் . பரிகாரம் செய்வதற்கு முதல் நாள் இரவே நவ தானியத்தை வாங்கி தண்ணீரில்  ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் ஊறவைத்த தண்ணீரை  விருட்சதிக்கு ஊற்றி பரிகாரம் செய்து கொண்டு, ஊறவைத்த தானியத்தை வெல்லம் சேர்த்து அரைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்தல் உங்கள் கர்ம விணைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். இம்மரம் வெளியிடும் காந்த அலைகள் உடலுக்கு நல்ல வலிமை தரும். இம்மரம் வெளியிடும் கற்றை சுவாசம் செய்தாலே உடல் நோய்கள் நீங்கும்.

திங்கள், 10 ஜூன், 2013

கோ பூஜை, கோதானத்தின் மகிமை

     
பகவான் ஸ்ரீ விஷ்ணு தன் மனைவி மகாலட்சுமி தேவியை பிரிந்திருக்க மனமில்லாமல் கிருஷ்ண அவதாரத்தில் மன்னனுக்கு பிறந்து இருந்தாலும் பசுக்கள் மேய்க்கும் இடையர் குலத்திலேயே வளர்ந்தார். மகாலட்சுமி தாயாரும் பகவானை பிரிந்திருக்க மனமில்லாததால் தானும் பசுவாக அவதரித்தார்.
         ரிஷிகளின் ஆசிரமத்தில் கோசாலை நிச்சயம் அமைந்திருக்கும். பசுவினிடத்தில் அனைத்து தேவர்களும் வாசம் செய்கின்றார்கள். பசுவின் நாசியில் வலது முருகனும், இடதில் வினாயகரும். இரு காதுகளில் அஸ்வினி குமாரர்களும், நெற்றியில் சிவனும், வலது கண்ணில்  சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், வலது கொம்பில் வேமனும், இடது கொம்பில்  இந்திரனும், மேல் தாடையில் இராகுவும், கீழ் தாடையில் கேதுவும், கழுத்தில் விஷ்ணுவும், திமிழில் பிரம்மாவும், திமிழ் பகுதிக்கு கீழ் சரஸ்வதியும், அடி வயிற்றில் பூமாதேவியும்,  அதனருகில் ஜனக குமாரர்களும், உடல் பகுதியில் வருணனும்,  அக்னியும், பின்பகுதியில் கங்காதேவியும், மகாலட்சுமி, மற்றும் பரத்வாஜர், குபேரன், நாரதர், வசிஷ்டரும், வலது முன்னங்காலில் பைரவரும், இடது முன்னங்காலில் ஆஞ்சநேயரும், வலது பின்னங்காலில் துரோணாசலமும், இடது பின்னங்காலில் மந்திராசலமும் அமைந்துள்ளது.
         கோபூஜை செய்வதால் பித்ரு தோஷம் நீங்கும், பசுவின் காலடி பட்ட மண் நம்மீது படவே நாம் புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். தூய்மையான பசு கொட்டிலில் தவம் இருந்தால் மந்திர சித்திகள்  கிடைக்கும்.
        ஊழ்வினை சாபம் நீங்கவும், வம்ச விருத்தி இல்லாதவர்களும் ( குழந்தை பாக்யம் ), பிரம்மஹத்தி தோஷம் என்னும் கொலை பாவங்கள் தீரவும் கோபூஜையும், கோதானமும் செய்யலாம்.
          உங்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகளாக இருக்கிறதா? வீட்டு சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதா? வீடு களையிளந்து இருக்கிறதா? வீட்டில் நுழைந்தவுடன் துர்நாற்றம் வீசுகிறதா? பணத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறதா? தேவையற்ற விரய செலவுகள் வந்து வாட்டுகிறதா?  அப்படியென்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யவில்லை மாறாக மூதேவியே வாசம் செய்கிறாள்.
           இந்த நிலை மாற நீங்கள் உடனே செய்ய வேண்டியது, கோபூஜையும், கோதானமும் தான். கோதானத்தின் மூலம் சகல பாவங்கள்  நீங்கும். வறுமை அகன்று வளமை பெருகும், புத்திர பாக்யம் உண்டாகும். கோதானம் செய்ய இயலாதவர்கள் கோபூஜை செய்யலாம்.
           சர்வ சக்தி விருட்ச பீடத்தில்  கோசாலை அமைக்கவுள்ளோம். இந்த தெய்வீக பணிக்கு நன்கொடைகளை வரவேற்கிறோம். இந்த நன்கொடைகள்  மூலம் பசுக்கள் வாங்கி பராமறிக்க உள்ளோம். நன்கொடை வழங்கும் நல்லுள்ளங்களின் தோஷங்கள் நீங்கி, வாழ்வு வளம் பெற அவர்களின் பெயரில் விஷேச கோபூஜைகள் நடத்தப்படும்.
         மேலும் விபரங்களுக்கு தொலைபேசி மற்றும் இமெயில்  மூலம் தொடர்பு கொள்ளவும்.