Translate

சனி, 15 ஜூன், 2013

மனிதர் முதல் தெய்வம் வரை வசியம் செய்ய

        நல்லதொரு பூச நட்சத்திரத்தில் சந்தன மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புல்லுருவிக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பொங்கல் இட்டு திரும்பி வந்து அடுத்த நாள் காலையில்  சென்று தூப தீபம் காட்டி வெள்ளை சாவல் பலி கொடுத்து இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்கள், நகங்கள் பத்தும் படாமலும் எடுத்துவந்து சாறு பிழிந்து மண் சட்டியில் தடவி காயவைத்து,  அதன்பின் சந்தன வில்லையை பொன்ணாங்கண்ணி சாறு விட்டு குழைத்து மண் சட்டியில் பூசி காயவைத்து , அதன் மேல் புத்துதேனை பூசி , கற்பூரம் ஏற்றி புகையை மண்சட்டியில் பிடித்து சட்டியில் உள்ள மையை வழித்து டப்பாவில் பத்திரபடுத்தவும். வெளியில் செல்லும் போது வினாயகரை மனமாற வேண்டி பொட்டிட்டு கொண்டு போக தேவர் முதல் மனிதர்வரை அனைவரும் வசியமாவார்கள்.