Translate

திங்கள், 1 ஜூலை, 2013

ஆலயங்களை வலம் வரும் முறை

          நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று வணங்கிவருகிறோம். ஆலயத்தில் நாம் பிரகாரங்களை சாஸ்திரமுறைப்படி வலம்வருவதால் நம் வேண்டுதல் உடனே நிறைவேறும். ஆலயங்களை வலம்வரும் முறையை இங்கு காணலாம்.

வினாயகரை - ஒருமுறையும்,
சிவனையும்,அம்மனையும் -  மூன்று முறையும்,
சித்தர், மகான்களின் சமாதியை - நான்கு முறையும்,
பெருமாள்- அம்மனை - நான்கு முறையும்,
அரசமரம், தலவிருட்சங்களை - ஏழு முறையும்,
நவகிரகங்களை - ஒன்பது முறையும் வலம் வர வேண்டும்.

            எக்காரணம் கொண்டும் தன்னை தானே வலம் வர கூடாது. தெய்வங்களை வலம்வரும் பொழுது அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்தோத்திர பாடல்களை சொல்லி வலம் வருதல் நலம் பயக்கும்.கோவில் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவும்.