Translate

சனி, 5 ஏப்ரல், 2014

பரணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                  "பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள், பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ இராசியில் இடம்பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ பிறந்தவர்கள், சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள், சரியான அளவு, அமைப்புடன் கூடிய உடல்வாகு தோற்ற பொலிவு கொண்டவர்கள், நல்ல ஆரோகியமும் நீண்ட ஆயுளும் கொண்டவர்கள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், எத்தகைய துன்பத்தினையும் மனதால் போட்டு குழப்பிகொள்ளாமல், அறிவுப்பூர்வமாக அதனை சிந்தித்து துன்பத்தில் இருந்து வெளியேறுபவர்கள், சாந்தமான சுபாவமும் இரக்க குணமும் இயற்கையிலேயே அமைய பெற்றவர்கள், அதிவேக சிந்தனையும் செயல்திறனும் கொண்டவர்கள், பிறரை எளிதாக புரிந்து கொள்பவர்கள், பிரயாணத்தில் அதிக ஆர்வம் கட்டுவார்கள், காதல் மன்னர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள், திட சித்தம் இல்லாதவர்கள், இவர்கள் அதிகமான பகைவர்களை உண்டாக்கி கொள்வார்கள்.இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் :
பரணி நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் காளி அல்லது துர்க்கை ஆகும். பரணி நட்சத்திர அதி தேவதை யமன், இந்த பூவுலகில் பிறந்த உயிரினங்களின் ஆயுளை முடிப்பவன் யமனே, நீல நிற தேகம்கொண்டு கையில் பாசமும் தண்டமும் ஏந்தி, நீதியில் கூரான தராசு முள்போல நடுநிலை காப்பவன். எருமை வாகனம் ஏறுபவன், சூர்யனுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தவன், சனீஸ்வரனின் சகோதரன் யமன், யமனே பரணி நட்சத்திர அதி தேவதை ஆகும்.

துர்க்கை காயத்திரி மந்திரம் 

                                         ஓம் காத்யாயனாய வித்மஹே 
                                                கன்யா குமாரீய தீமஹி !
                                          தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !!

யம காயத்திரி மந்திரம் 

பாச தண்டோஜ்வல புஜத்வயம் மகிஷ வாகனம் !
யமம் நீலதனும் பீர்ம பரணி தேவதாம் பஜே !!

பரணி நட்சத்திர காயத்திரி 

ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி !
தந்நோ பரணி ப்ரசோதயாத் !!


பரணி நட்சத்திர பரிகார விருட்சம் 

பரணி நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நெல்லி மரம் ஆகும். தவா என்றால் கருநெல்லி என்று பொருள். மஹா விஷ்ணுவுக்கு மாதவா என்று பெயர் உண்டு. லக்க்ஷ்மியின் அம்சம் தவாவுடன் சேர்ந்ததால் மாதவா என்று பெயர் வந்ததாக பெரியோர்கள் சொல்கிறார்கள். பரணி  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த பரணி  நட்சத்திரம் வரும் நாளில் நெல்லி  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நெல்லி  மரத்துக்கு நீர் உற்றுவதும், நெல்லி  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பரணி  நட்சத்திர அன்பர்கள் துர்க்கா  காயத்திரி, யம  காயத்திரி  மந்திரம், பரணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நெல்லி  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :




                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.


அஸ்வினி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

        அஸ்வினி நட்சத்திரதின் அதிபதி கேது பகவான் ஆகும். கேது பகவான் ஞானகாரகன், அதாவது ஞானத்துக்கு அதிபதி. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூட்சும புத்தி கொண்டவர்கள். ஆடை அணிகலன்களில்  ஆர்வம் கொண்டவர்கள், அனைவராலும் விரும்பப்படுபவர்கள், எடுத்த காரியங்களை எப்பாடு பட்டாவது முடிக்கும் திறன் கொண்டவர்கள், சாந்தமான குணம் உடையவர்கள், தாராள மனமும் உண்டு, மன உறுதி கட்டுப்பாடு மிகுந்தவர்கள், அதே சமயம் பணிவும் உண்டு, பிறரை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள், எந்த தொழிலை செய்தாலும் அர்வமுடனும் அக்கறையுடனும் செயல்பட்டு பிறரின் பாராட்டுக்களை பெறுவர், துணிச்சலும் தன்னம்பிக்கையும் இவர்களுக்கு இரு கண்களை போன்றது. அதே சமயம் இவர்கள் புகழுக்கு மயங்குவதும் உண்டு, வாழ்வின் சுக போகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கட்டுவார்கள், மிகந்த செயல் திறன் கொண்ட இவர்களின் பேச்சு ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருக்கும், இவர்களுக்கு நல்லவர்கள் மட்டும் இன்றி தீய நண்பர்களின் நட்பும் இருக்கும், சரி இவர்களின் நல்ல குணங்கள் ஒருபுறம் இருக்கட்டும் இவர்களின் வாழ்வில் தடை கற்களாக விளங்கும் எதிர்மறை குணங்கள் விலகவும், இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் : 
        "திரியக் முகம்" என்ற சம நோக்கு கொண்டதாக 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சதிரதிற்கு அமிர்தத்துக்கு ஒப்பான வெண்ணிற ஆடை உடுத்தி நான்கு வேதங்களுக்கும் அதிபதியம் படைப்பு கடவுளான பிரம்மனுக்கு மனைவியாகி, கல்வியினை  ஞானதினை  உலகோருக்கு அருளும் அன்னை சரஸ்வதியே அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தெய்வமாகும்.

சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹெ
         விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி !
தன்னோ வாணீ ப்ரசோதயாத் !!

அஸ்வினி நட்சத்திர அதி தேவதைகள் அஸ்வினி தேவர்கள் ஆகும். இவர்கள் தேவ வைத்தியர்கள், சூரியனுக்கும் சஞ்ஞாதேவிக்கும் பிறந்தவர்கள், சஞ்ஞாதேவி பெண் குதிரை வடிவில் தவம் இயற்றிய போது சூரிய ஒளிபட்டு அந்த குதிரையின் நாசி துவாரத்தில் இருந்து தோன்றியவர்கள், அஸ்வம் என்றால் குதிரை, அஸ்வதில் இருந்து தோன்றியதால் அஸ்வினி தேவர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. அஸ்வினி தேவர்கள் இருவர், இவர்கள் இருவரும் இணை பிரியாமல் இருப்பார்கள். இவர்களே அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதைகள் ஆகும்.

அஸ்வினி தேவர்கள் மந்திரம் :

                           அஸ்வினீ  தேவதே ஸ்வேத வர்னௌ
                                          தாவஸ்விநௌ து மஹ : !
                            சுதா சம்பூர்ண கலச கராலஜெள
                                           அஸ்வ வாசு கநெள !!


பரிகார விருட்சம் :
                                        அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார விருட்சம் எட்டி மரம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த போது அமிர்தத்தொடு ஆலகால விஷமும் வெளிப்பட்டது அல்லவா, அந்த விஷத்தால் உலகமே அழிந்து போய்விடும் என்று சிவ பெருமான் அவ்விஷத்தை தான் உண்டு உலகை காப்பாற்றினார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளம் தான் இந்த எட்டி மரம். உலகையே ஆலகால விஷத்தில் இருந்து காத்த பரமனுக்கு நன்றி சொல்லும் விதமாக அஸ்வினி தேவர்கள் எட்டி மர வனத்தில் தவம் இயற்றினர். அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் எட்டி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று எட்டி மரத்துக்கு நீர் உற்றுவதும், எட்டி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் சரஸ்வதி காயத்திரி, அஸ்வினி தேவர்கள் மந்திரம், அஸ்வினி நட்சத்திர காயத்திரி மந்திரங்களை எட்டி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :




                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

வெள்ளி, 7 மார்ச், 2014

செய்வினையும் அதன் ஏழு வகைகளும்

         
பொதுவாக செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன இனி இந்த முறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. பந்தனம் :
                       பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.

2. ஸ்தம்பனம் :
                            ஒருவர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் எதுவாயினும் அதை நடைபெற விடாமல் தடுப்பதாகும். ஸ்தம்பனம் - இயக்கத்தை நடைபெற விடாமல் நிறுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.

3. மோகனம் :
                          ஒருவர் தன்னை பற்றியே நினைத்து உடலும் உள்ளமும் உருகும்படி செய்துவிடுதல். மோகனம் மூலமாக செய்வினையால் பாதிக்கப்பட்டவர் உறங்கும்போது கெட்ட கனவுகள் கண்டு உறக்கத்திலேயே விந்து கழியும், நாளடைவில் உடல் நலம் கெட்டு அவதிப்படுவார்.

4. ஆகர்ஷனம் :
                             ஒருவரை வசிகரித்து யாருக்காக வசீகரப்படுத்தப் படுகிறாரோ அவருக்காக எதையும் செய்ய தயாராக மாறுதல்.  இதை வசியம் என்றும் சொல்லுவார்கள்.

5. உச்சாடனம் :
                             ஒருவரை மற்றொருவர் மேல் பைத்தியம் பிடித்தது போல் ஆக்கி விடுவது, ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பது, வீட்டில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் சண்டையிடும்படி செய்தல், பண விரயங்களை உண்டாக செய்தல், இன்னும் பல கஷ்டங்களை உண்டாக்க முடியும்.

6. உன்மத்தனம் :
                               ஒருவரை பைத்தியமாக்கி விடுதல், கணவன் - மனைவி இடையே சந்தேகத்தை உண்டாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிரித்து விடுதல்.

7. மாரணம் :
                        ஒருவரை வியாதியால் உழல வைத்து நடமாட முடியாதபடி செய்து மரணமடைய செய்தல்,  கற்பத்தில் உள்ள கருவை அழித்தல், வீட்டில் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களை ஏற்படுத்துதல்.

          ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

புதன், 5 மார்ச், 2014

மந்திர வகைகள்

       
மந்திரம் என்ற சொல்  நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பொதுவாக 1. மூல மந்திரம், 2. பீச மந்திரம், 3. பஞ்ச மந்திரம், 4. சடங்க மந்திரம், 5. சங்கிதா மந்திரம், 6. பத மந்திரம், 7. மாலா மந்திரம், 8. சம்மேளன மந்திரம், 9. காயத்திரி மந்திரம், 10. அசபா மந்திரம், 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம், 12. மாதிருகா மந்திரம், 13. மோன மந்திரம், 14. சாத்திய மந்திரம், 15. நாம மந்திரம், 16. பிரயோக மந்திரம், 17. அத்திர மந்திரம், 18. விஞ்சை மந்திரம், 19. பசிநீக்கு மந்திரம், 20. விண்ணியக்க மந்திரம், 21. வேற்றுரு மந்திரம், 22. துயில் மந்திரம், 23. திரஸ்கரிணீ மந்திரம், 24. சட்கர்ம மந்திரம், 25. அஷ்ட கர்ம மந்திரம், 26. பஞ்சகிருத்திய மந்திரம், 27. அகமருடண மந்திரம், 28. எகாஷர மந்திரம், 29. திரயஷரி மந்திரம், 30. பட்சாஷார மந்திரம், 31. சடஷர மந்திரம், 32. அஷ்டாஷர மந்திரம், 33. நவாக்கரி மந்திரம், 34. தசாஷர மந்திரம், 35. துவாதசநாம மந்திரம், 36. பஞ்சதசாக்கரி மந்திரம், 37. சோடஷாஷரி மந்திரம், 38. தடை மந்திரம், 39. விடை மந்திரம், 40. பிரசாத மந்திரம், 41. உருத்திர மந்திரம், 42. சூக்த மந்திரம், 43. ஆயுள் மந்திரம், 44. இருதய மந்திரம், 45. கவச மந்திரம், 46. நியாச மந்திரம், 47. துதி மந்திரம், 48. உபதேச மந்திரம், 49. தாரக மந்திரம், 50. ஜெபசமர்பண மந்திரம், 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
                 இவையன்றி 52. நீலகண்ட மந்திரம் , 53. மிருத்யுஞ்சய மந்திரம் , 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 55. சரப மந்திரம் , 56. வீரபத்ர மந்திரம் , 57. பைரவ மந்திரம் , 58. விநாயக மந்திரம் , 59. சண்முக மந்திரம் , 60. நரசிங்க மந்திரம் , 61. நவகிரக மந்திரம் , 62. வாலை மந்திரம் , 63. புவனை மந்திரம் , 64. திரிபுரை மந்திரம் , 65. துர்க்கை மந்திரம், 66. அசுவாரூடி மந்திரம், 67. சப்தமாதர் மந்திரம், 68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 69. பதினெண் கண மந்திரம், 70. யோகினியர் மந்திரம், 71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில்  ( நமது பாரத தேசத்தில் )  உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
              இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள். அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

வியாழன், 30 ஜனவரி, 2014

தீராத நோய்களை போக்கும் நவபாஷான - பஞ்சகவ்ய சிகிச்சை

நவபாஷானம் :
     

நவபாஷானம்  என்பது ஒன்பது பாஷானம் (ஒன்பது விஷம் ) அவை வீரம்,பூரம்,சாதிலிங்கம்,கௌரி,வெள்ளை பாஷானம்,தாளகம்,மனோசிலை,அரிதாரம் முதலிய பாஷானங்கள்  ஆகும். இந்த ஒன்பது பாஷானங்களை (விஷங்களை ) சுத்தி செய்து மனிதனுக்கு உட்கொள்ளும் மருந்தாக  மாற்றம் செய்யப்படுகிறது. நவபாஷானம் என்றல் நமது நினைவுக்கு வருவது பழனி மலையில் உள்ள முருகன் சிலைதான். நவபாஷான சிலை உடையாது, வளையாது, நெருப்பில் போட்டாலும் உருகாது. இதற்க்கு விலைமதிப்பே கிடையாது.நவபாஷானத்தின் சக்திகளை அளவிட முடியாது. தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்தது. நவபாஷானத்தை நேரடியாக சாப்பிட கூடாது என்பதற்காக சித்தர்கள் நவபாஷான சிலைகளை பால் தேன் பஞ்சாமிருத அபிஷேகம் செய்து அபிஷேக பொருட்களை மக்கள் சாப்பிடும் வண்ணம் செய்தனர். தீராத நோய்களை உடையவர்கள் காலையும் மாலையும் நவபாஷான தீர்த்தம் உட்கொண்டு வந்தால் தீராத நோய்கள்  தீரும். தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும். உடல் மற்றும் மன சுத்தியும் உண்டாகும்.

பஞ்சகவ்யம் :

                              பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம் என்ற ஐந்து பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவது பஞ்சகவ்யம் ஆகும். இதில் பால் 5 பங்கும், தயிர் 3 பங்கும்,நெய் 2 பங்கும், கோ மூத்திரம் 1 பங்கும், பசுஞ்சாணம் கை பெருவிரல் அளவும் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மனித மருத்துவதிற்கும்  மற்றும் விவசாய பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படுகிறது. மருத்துவத்திற்காக சரியான முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மட்டுமே மருத்துவத்தில் நோய்களை தீர்க்க உபயோகப்படுத்தவேண்டும். குறிப்பு :- உதரணமாக பஞ்சகவ்யம் தயாரிக்க பயன்படும் சாணம் பூமியில் விழும் முன்பே தாமரை இலையில் பிடிக்கவேண்டும். ஒரு ஈ அந்த சாணத்தில் அமர்ந்தால் கூட அந்த சாணம் பஞ்சகவ்யம் தயாரிக்க உபயோகப்படாது. பஞ்சகவ்யம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தீராத பல வியாதிகளை தீர்க்கும் தன்மை பஞ்சகவ்யதிற்கு உண்டு. என்னுடைய குருவின் அனுபவத்தில் கேன்சர், எயிட்ஸ் போன்ற நோய்களும் குணமடைந்தது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் உள்ளன. கொமூத்திரதிற்கு வருணனும், சாணத்திற்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்சகவ்யத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்தல் பாபங்கள் விலகும். 

                   நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் மக்களின் நலனுக்காக தீராத வியாதிகளை தீர்க்க நவபாஷான - பஞ்சகவ்ய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.




புதன், 15 ஜனவரி, 2014

ஜோதிடம்,நாடிஜோதிடம்,ஜீவநாடி - விளக்கம்


ஜோதிடம் :
நமது வேதங்கள் நான்கு ஆகும். அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் ஆகும். இந்த வேதங்களுக்கு கண்கள் என வர்ணிக்கப்படுவது சிட்சை, வியாகரணம், சந்தாஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பனவாகும். "ஜ்யோதிஷம்" என்பதில் ஜ்யோதி என்றால் சூரியன். சூரியன் இல்லையென்றால் இந்த பிரபஞ்சமே இல்லை.சூரியனை நடுநாயகமாக கொண்டுதான் நாம் வாழும் பூமி மற்றும் அனைத்து கிரகங்கள், நட்சத்திரங்களின் இயக்கமே நடைபெ
ற்று வருகிறது.
ஜோதிடம் = ஜோதி + திடம் . ஜோதி என்றால் ஒளி, திடம் என்றால் உறுதியான, ஒரு மனிதனின் வாழ்வில் உறுதியான ஒளிவிளக்கை ஏற்றி வைக்கும் கலையே ஜோதிடம் ஆகும். மனிதன் ஜனனமாகும் வேளையை கொண்டு பிறப்பு ஜாதகம் எழுதப்படுகிறது. அதனை கொண்டு அந்த மனிதனின் முக்கால பலன்களை தெள்ளத் தெளிவாக அறிய முடியும்.
நாடிஜோதிடம் :


பழங்கால ஓலைசுவடிகளை வைத்துக்கொண்டு ஜோதிடகலையை நன்கு கற்றுணர்ந்த நபர்கள் நம்மிடமே உங்களின் பெயர் இந்த எழுத்துக்களில் வருகிறதா, இல்லை தனி பெயரா, கூட்டு பெயரா என்பது போன்ற கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு பின் அவைகளை சித்தர் பாடல்கள் போல தொகுத்து நம் ஜாதக பலன்களை அந்த பாடல்களில் கோர்வையாக்கி பலன் சொல்லும் தந்திரமே நாடி ஜோதிடம் ஆகும். எனக்கும் நாடிஜோதிடம் படிக்கும் நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்கள் சொன்ன உண்மை இது. அவர்கள் என்னை மன்னிக்கவும். நாடி ஜோதிடம் சொல்லித் தரும் பயிற்சி மையங்களும் உண்டு. சித்தர்கள் எழுதிய ஒரு பாடல்களில் கூட அவர்கள் நாடிஜோதிடம் பற்றி ஒரு வரி கூட எழுதாததை கொண்டே நாடிஜோதிடத்தை போலி என்றே சொல்லலாம்.


ஜீவநாடி ஜோதிடம்  :

ஜீவநாடி என்பது சித்தர்களும், மகரிஷிகளும் இயற்றியதாகும், இதனை காகபுஜண்டர், சுகர்மகரிஷி, அகத்தியர் போன்ற சித்தர்களின் பாடல்களில் இருந்தே நாம் உண்மை என அறியலாம். ஜீவநாடி ஓலைசுவடி என்பது உண்மை. ஜீவன் என்றால் உயிர், ஜீவிதம் என்றால் வாழ்க்கை. மனிதனின் வாழ்க்கை சிக்கல்களுக்கு உடனடி தீர்வினை தரும் வகையில் நம் மேல் கருணைகொண்டு சித்தர்கள் இயற்றி வைத்ததே ஜீவநாடி ஆகும்.



                நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பக்தர்களின் நலனுக்காக நந்தி மற்றும் அகத்தியர் ஜீவ நாடி வாசித்து பலன்கள் சொல்லப்படுகிறது.முன்பதிவு செய்ய ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை பின்வரும் அலைப்பேசி எண்களில் அழைக்கவும். செல் : 99440 99980, 85260 74891.

ஜீவநாடி அற்புதங்களும் பேருண்மைகளும்


ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன்
இப்பாரதத்து பெருநகர் ஆங்கென் ஒளர் விரிசலும்
காலவழி தன்னிலே குறுக்கிடலும் விதியாகும்
வலுவிழர்ந்தார்ப் போல வாட்டமது கொண்டார்ப் போல
நின்றிடினும் கூட்டமது காண ஒளர்வழி
உலகுக்கு ஒளிஒத்து உத்தமர்க்குப் பெரும்பலன்
ஏற்றிய விளக்கொளி என்று ஞானியரும் ஜீவமுக்தரும்
யோகியரும் சித்தாதிப் பெருமுனியொரும் விண்டுரைதவாறு
தவஒளியாலே ஒளர்பலன் துல்லியமாய் எழுந்துபேச
துரிதத்தினால் துரியாதீதம் கடந்துமறு கண்ணும் ஒளர்வழிகண்டு
வையகத்தார்க்கு உறவென்னும் ஒளர்நிலை பதவி உகந்தேகூட்டவே
பாரதத்தின் பெருமைஒளி பருலகோர்க்குக் கண்ணொளியும்
நிறைபலம் காணச்செய்யும் விதியது இனியாகுமப்பா
- காகபுஜண்டர் ஜீவநாடி

நாடியில் குறிப்பிட தகுந்த உயர்வான ஒன்று ஜீவநாடி ஆகும். இதுஒரு அதிசயநாடி என்றும் அற்புதநாடி என்றும் கூறினாலும் மிகையில்லை. ஜீவன் என்றால் உயிர், ஜீவநாடி என்றால் உயிர்நாடி என பொருள்படும், ஜீவிதம் என்றால் மனித வாழ்க்கை ஆகும். எனவே மனித வாழ்வில் தோன்றும் சிக்கல்களுக்கு, அந்த கேட்கும் நேரத்தில் உயிர்பெற்று பலன் சொல்வதால் அத்தகைய ஓலைச்சுவடிகளை ஜீவநாடி என்று போற்றுகிறோம். அவ்வாறு மனித வாழ்வில் முன் பிறவிகளில் செய்த கர்ம வினை பதிவுகளால் இந்த பிறவியில் நமக்கு வரும் கர்மவினையால் நாம் அடையும் துன்பங்கள் தீரவும் வழிகாட்டும் விதமாக சித்தர்களும், மகாமுனிவர்களும் இத்தகைய ஜீவநாடி ஓலைச்சுவடிகளை இயற்றினர்.
சித்தர்கள் மற்றும் மகரிஷிகளின் ஜீவநாடி என்பது அரூபமாக நாடி படிப்பவரின் கண்களுக்கு ஒளிரும் மஞ்சள் நிறமுடைய எழுத்துக்களாய் தோன்றி பலன் கேட்பவரின் வினைபதிவினையும் அதனால் உண்டாகும் நல்ல மற்றும் தீய பலன்களையும், அவர்களுக்கு நேரும் துன்பங்களை போக்க செய்யவேண்டிய பரிகாரங்கள், பூஜைகள் மற்றும் செய்யவேண்டிய முறை முதலியவற்றை தெளிவாக பாடல்கள் வாயிலாக ஜீவநாடி படிப்பவர்க்கு உணர்த்தும். ஜீவநாடி படிப்பவர் படிப்பதை நாம் எழுதிவைத்துக்கொண்டோ அல்லது ஒலிநாடாவில் பதிவு செய்துகொண்டோ பின்னர் பாடல்களுக்கு விளக்கத்தினை அவரிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.
ஜீவநாடியை எல்லோரும் படித்து பலன் சொல்ல இயலாது, இறைஅருளும், சம்மந்தப்பட்ட சித்தர் மகரிஷிகளின் ஆசியும் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஜீவநாடி உயிர்பெற்று பலன் சொல்லும், மற்றவர் கண்களுக்கு சாதாரண ஓலைச்சுவடியாகவே காணப்படும்.
இந்த உலக வாழ்வில் ஆன்மீகவழியில் நடந்தால் மட்டுமே நன்மைகளை பெறமுடியும், சித்தர்களின் சக்திகள் என்பது நாம் அறிந்த ஒரு விசயமாகும். இன்றைய விஞ்ஞானிகளுக்கு புரியாத பல விசயங்களை பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டு சொன்னவர்கள் சித்தர்கள். இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் சித்தர்கள். இத்தகைய சித்தர்களால் சாதிக்கமுடியாத விஷயம் ஏதும்இல்லை. இத்தகைய சித்தர்கள் எழுதிய ஜீவநாடி உலகமக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும்.இத்தகைய ஜீவநாடி சுவடிகள் அரிதாகவே இருக்கின்றன. அத்தகைய ஜீவநாடி சென்னையில் மறைந்த ஜோதிட பெருமகனார் திரு.ஹனுமன்தாசன் அவர்களிடம் இருந்தது. அதன் மூலம் பயனடைந்தோர் பலர், அவர் வாசித்த சுவடி அகத்தியர் ஜீவநாடி ஆகும்.மேலும் தஞ்சையில் ஜோதிடர் திரு.கணேசன் அவர்களிடமும் ஒரு ஜீவநாடி சுவடி உள்ளது.
ஜீவநாடி என்பது நம்மை வாழ்விலும், வளத்திலும், ஆன்மீகத்திலும் உயரவைக்கும் உயிர்நாடி ஆகும். நம் வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் உடனடி தீர்வினை தரும் உயர்நாடி ஜீவநாடி ஆகும். இத்தகைய அபூர்வசக்தி கொண்ட நந்தி மற்றும் அகத்தியர் சித்தரின் ஜீவநாடி எங்களின் சர்வசக்தி விருட்சபீடத்திற்க்கு இறையருளால், சித்தகளின் ஆசியால் வந்து சேர்ந்தது, அந்த அறிய ஜீவநாடியில் வந்த பாடலின் படி நாங்கள் சர்வசக்தி விருட்சபீடத்தை உருவாக்கி வருகிறோம். சர்வசக்தி விருட்சபீடத்தில் 27 நட்சத்திர பரிகார விருட்சங்களை நட்டு அனுதினமும் பூஜைகள் நடத்தி வரும் பக்தர்களின் குறைதீர ஜீவநாடி படித்து பலன்களை சொல்லிவருகிறோம்.

மேலும் விபரங்கள் பெற சர்வசக்தி விருட்சபீடத்தினை தொடர்புகொள்ளவும். அலைபேசி எண் : +91 85260 74891,9944099980.

திங்கள், 13 ஜனவரி, 2014

விதியை மற்றும் மூலிகைகள்



மிக பெரிய வெற்றி தரும் தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்

     

இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க அல்லது வெள்ளி  தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . எங்கள் பீடத்தில் தாமிரத் தகட்டில் தன்வசிய எந்திரம் எழுதி அதன் மீது சில மூலிகைச் சாற்றினை ஊற்றி தாமிர தகட்டை 18 கேரட் தங்கமாக மாற்றுவதால் இதன் சக்தி அளவிட முடியாததாகும் .தன் வசிய எந்திரம் அணிய தொடர்புகொள்ளவும். சர்வ சக்தி விருட்ச பீடம் - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் - அலைபேசி : 85260 74891



வளமான வாழ்வு தரும் கருணை கல்



வளமான வாழ்வு தரும் கருணை கல் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காணலாம் . நாம் அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதில் இராசி கற்களையும், நவரத்தினங்களையும், உபரதினங்களையும் அதன் குணங்களையும் கேட்டும் படித்தும், அனுபவத்தில் வாங்கி உபயோகப்படுத்தியும் இருப்போம்.நவரத்தினங்கள் என்பது மாணிக்கம், முத்து, புஸ்பராகம், கோமேதகம், வைரம், மரகதம், வைடூர்யம், நீலம், பவளம் ஆகும். உப இரத்தினங்கள் என்பவை டோபாஸ், அமிதிஸ்ட், சன் ஸ்டோன், மூன்ஸ்டோன், கார்னெட், டைகர்ஸ் ஐ, ஜிர்கான் போன்றவைகள் ஆகும். இந்த கற்கள் எல்லாம் ரசியின்படியும், எண்கணிதத்தின் படியும் ஜோதிடர்களால் நமக்கு சொல்லப்படும் கற்களாகும். இவைகள் கிரக ரீதியில் வரும் கேடு பலன்களை குறைத்து நமக்கு நல்ல பலன்களை வழங்குவதற்காக இறைவனால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

                ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது வளமான வாழ்வு தரும் கருணை கல். இது உலகிலேயே கிடைப்பதற்கு அரிதான அறிய அற்புதமான கல் ஆகும். உலகம் முழுவதும் பல கல கட்டங்களில் பல சித்தர்களும், ஞனிகளும் தோன்றி பல அற்புதங்களை செய்துவந்ததை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இவ்வகையில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மலையில் ஒரு அபூர்வ சித்தர் பல ஆண்டு காலமாக கடும் தவம் இயற்றி வந்தார். பலகாலமாக தவம் செய்து வந்த அந்த சித்தரின் சக்தி முழுவதும் அவர் அமர்ந்து தவம் செய்த அந்த மலை முழுவதும் வியாப்பித்து பரவியது. அந்த சித்தர் பல சித்திகளை பெற்று இறுதியில் அந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.
      
                   அந்த சித்தரின் சக்தி எல்லாம் ஒன்று கூடி பாதரசம் போல மாறி அந்த மலை முழுவதும் இருக்கிறது. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட புனிதமான நாளில் இது மலையில் இருந்து வெளியில் வருகிறது. இந்த பாதரசம் போன்ற திரவமே முன்பு நான் குறிப்பிட்ட வளமான வாழ்வு தரும் கருணை கல் ஆகும். பாதரசம் போன்ற திரவம் எப்படி கல்லாகும் என்ற கேள்வி எழலாம்.

                      இது எப்படி சாத்தியமாகிறது என்றல் அந்த மலையில் இன்றும் பல தவ சீலர்கள் தன்னலம் இன்றி ஆசா பாசங்களை துறந்து தவம் செய்து வருகிறார்கள். இவர்களை புத்தாஸ் (சித்தர்) என்று அங்கு அழைக்கிறார்கள். அந்த பாதரசம் போன்ற திரவம் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வெளிவரும் போது சில மந்திரங்களை பிரயோகம் செய்கிறார்கள். அந்த மந்திரங்களின் சக்தி பாதரசம் போன்ற திரவத்தை கல்லாக மாற்றுகிறது. பொதுவாக எந்த கற்களும் காந்தத்தில் ஒட்டுவதில்லை. ஆனால் இந்த அற்புத கல் காந்தத்தில் ஒட்டுகிறது. இத்தகைய அற்புத கல்லை ஒரு வருட காலம் போராடி அந்த அற்புத மலையில் தவமியற்றும் புத்தாஸ் (சித்தர்) இடம் பெற்றோம்.

                      இந்த அற்புத கல்லின் சக்தி என்ன?  இந்த கல்லை நாம் உடலில் அணிவதால் தெய்வங்கள் நமக்கு வசியமாகும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நம்முடன் தெய்வங்கள் இருந்து வழிநடத்தும், அந்த செயல்கள் அனைத்திலும் வெற்றியை பெற்று தரும். இந்த அற்புத கல் ஜன வசியம், தன வசியம், தொழில் வசியம், புகழ், மேன்மை, வெற்றி, பாதுகாப்பு தருகிறது. இந்த அற்புத கல்லின் சக்தியை சொல்ல வார்த்தைகளில் அடங்காது. இந்த கல் நமது வாழ்வை வளமானதாக மாற்றுகிறது. தாய்லாந்தில் இந்த கல்லை நாம் பெரும் போது அந்த சித்தரிடம் இதனை பெறும்போது இந்த கல்லின் பெயரை கேட்டபோது தாய்லந்து வார்த்தையில் ஒரு பெயரினை சொன்னார். அதன் தமிழாக்கம் கருணை கல். அதாவது இந்த கல்லை நாம் அணிவதால் இறைவனின் கருணையுடன் நமக்கு உதவுவார்.  இந்த வளமான வாழ்வு தரும் கருணை கல் இந்த ஆண்டு 17 கற்கள் இறைவன் திருவருளால் எனக்கு கிடைத்தது. இந்த அற்புத கற்கள் பிராப்தம் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தேவைப்படுவோர் சர்வ சக்தி விருட்ச பீடத்தை உடனே தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள். செல் : 99440 99980, 85260 74891. 



லக்ஷ்மி குபேர சஞ்சீவி 
.


         
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். சர்வ சக்தி விருட்ச பீட ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை. அலை பேசி : 099440 99980, 085260 74891.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பஞ்சலிங்கம்


ஆதிசங்கரர் கயிலையில் உமையன்னையுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு களிகொண்டு வணங்கினார் ஸ்ரீசங்கரர். சிவ பெருமானின் அடியிலிருந்து முடிவரை வர்னித்துப்பாடினார். அதில் திருப்தி உண்டாகாமல் மீண்டும் முடியிலிருந்து அடி வரையில் வர்ணணை செய்து இன்னொரு துதி செய்தார். இவை "சிவ பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்"எனவும் சிவ கேசாதி பாதாந்த ஸ்தோத்திரம் எனவும் வழங்குகின்றன.

சிவபெருமான் தனது அவதாரமான ஆதிசங்கரர் செய்துவரும் அரும் பணியைப் பாராட்டினார். "பஞ்ச லிங்கங்கள்"ஐந்து ஸ்படிக லிங்கங்களை ஆதிசங்கரருக்குத் தந்தார். அவருக்கு அருகே இருந்த சக்தியை துதிப்பதற்கு முடியாமல் சங்கரர் பிரம்மித்து நின்றார். உடனே பரமசிவன் தாமே அம்பிகையை துதித்துச் செய்திருந்த "ஸெளந்தர்யலஹரி"என்ற நூல் சுவடியையும் சங்கரருக்கு வழங்கினார்.


இவற்றைப் பெற்று மிகுந்த பூரிப்போடு சங்கரர் கையிலையிலிருந்து வெளிவந்தார். காவலில் இருந்த நந்திதேவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பாதிசுலோகங்களை அவருக்குக் கொடுத்துவிட்டார். "ஸெளந்தர்யலகரி"யின் முதல் நாற்பத்தியரு சுலோகங்கள் மட்டும்சங்கரர் கையில் தங்கின. மீதமுள்ள ஐம்பத்தொன்பது சுலோகச்சுவடிகளை நந்திதேவர் பெற்றுக்கொண்டார்.

கையிலையைவிட்டு வெளிவந்த நம் ஆசாரியருக்கு இப்போது அம்பிகையைக் குறித்த பிரம்மிப்பு நீங்கிவிட்டது. அவளது அருளால் அவரே புதிதாக ஐம்பத்தொன்பது அற்புதமான சுலோகங்களை இயற்றி "ஸெளந்தர்யலகரி" நூலைப் பூர்த்திசெய்து விட்டார். ஆசாரியரின் பல துதிகளுக்குள் இலக்கியச் சுவையில் சிகரமாக விளங்குவது "ஸெளந்தர்யலகரி"யே ஆகும். அதைப் பாராயணம் செய்வதால் பலவிதமான உபகர நலன்களும் கைகூடும்.


 பசுபதிநாதர் என்ற ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தின் சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பாக உள்ளது லிங்கத்தின் நான்கு புறங்களில் திசைக்கொன்றாக ஒவ்வொறு முகம் லிங்கத்தின் உச்சியில் அம்பிகையின் வடிவான ஸ்ரீசக்ரம் எழுதிப் பூஜிப்பது இன்னொரு முகத்துக்குச் சமானம்.

மகாவிஷ்ணு பூஜைக்குறிய சாளக்ராமம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியிலேயே கிடைப்பது. சிவபெருமான் உகந்து அணியும் ருத்ராக்ஷமும் அங்குதான் நிறைய காய்க்கிறது. பசுபதி நாதர் கோயில் முழுவதையும் சிவராத்திரியன்று ருத்திராட்சங்களால் அலங்கரித்து, விசேஷ பூஜை புரிவார்கள்.
இத்தனை சிறப்புகள் பொருத்திய பசுபதிநாதத்திற்கு ஸ்ரீசங்கரர் விஜயம் செய்து, ஸ்வாமி தரிசனம் செய்து பேரின்பம் எய்தினார். அங்கு ஆலய வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தித் தந்தார். சிவபெருமானிடமிருந்து பெற்ற ஜந்து ஸ்படிகலிங்கங்களுள் ஒன்றான முக்திலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீசங்கரர்.

பரமசிவனிடமிருந்து பெற்ற ஐந்து பங்கு லிங்கங்களுள் மற்றொன்றான முக்திலிங்கத்தை கேதாரிநாதத்தில் ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
பாரததேசத்தின் நான்கு திசைகளிலுமாக மொத்தம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. இவற்றில் ஒன்று கேதார்நாத்தில் உள்ளது. ஸ்ரீசங்கரர் இயற்றிய "துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திர"த்தில் கேதாரிநாதனைக் குறிப்பிட்டு வந்தனம் தெரிவிக்கிறார்


இவ்விதமான பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்கா நதி பாயும் சமவெளியை அடைந்தார். அங்கே தம் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தினார். அவர்களுக்கு உபதேசத்தின் மூலம் பல அரிய தத்துவங்களை விளக்கினார். பிற மதவாதிகளுடன் வாதம் செய்து அவற்களை வென்று வேதாந்தக் கருத்துக்களை வேரூன்றச் செய்தார் நம் ஆசாரியர். பாரத தேசமெங்கும் சுற்றி அத்வைதத்தைப் பரப்பிய ஸ்ரீசங்கரர், வடகோடியிலிருந்து தெற்கே வந்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கே பஞ்சலிங்கங்களில் ஒருவரான மோட்சலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.


மீண்டும் சிருங்ககிரிக்கு எழுந்தருளினார் நம் ஜகத்குரு சங்கராச்சாரியார். பரமசிவன் அளித்த பஞ்சலிங்கங்களில் போகலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார்.



காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டனர் ஆசாரியர். அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடிபீடம்'என்ற மகத்தான சக்திபீடம் உண்டு. காஞ்சிபுரத்தில் தமக்கெனமையமான மடத்தை ஏற்படுத்திக்கொண்ட சங்கரர், அந்த இடத்திற்கு காமாட்சி அம்மனின் பீடத்தின் பெயரான காமகோடிபீடம் என்பதையே தமது மடத்திற்கும் வைத்துக்கொண்டார்.
பஞ்சலிங்கங்களில் எஞ்சிய யோகலிங்கத்தை தனது பீடத்தின் பூஜைக்கென வைத்துக்கொண்டார். இன்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸ்வாமிகளும் பூஜை செய்யும் சந்திர மௌலீசுவ ஸ்படிகலிங்கமே இந்த யோகலிங்கமாகும்.

உண்மைத் துறவியின் அடையாளம்


                     


போ
லியாக தவவேடமிட்டு, மக்களை ஏமாற்றுபவர்கள் இந்த பூமிக்கே அவமானச் சின்னங்கள் என்று திருமூலர் வன்மையாகக் கண்டித்தார். உண்மையான துறவிகளின் அடையாளங்கள், பண்புகள் என்ன? போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன? சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.


""ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்

ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்

ஞான் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''

-திருமந்திரம் பாடல் எண்: 1652.

உண்மையான "ஞானமே' துறவின் சிறப்பு அம்சம். சிவஞானம் (மெய்ஞானம்) கைவரப் பெற்றவர்களே துறவறத்திற்குத் தகுதி உடையவர்கள். கடுமையான தவம், தந்திரயோகப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மெய்ஞானத்தை உணர்ந்த பின்னரே துறவு வேடம் தரிக்க வேண்டும். உண்மையான ஞானநிலையை அடைந்தவர்களுக்கு எந்த வேடமும் தேவையில்லை என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.




"ஞானம் இல்லார் வேடம் பூண்டும் நரகத்தார்' 

உண்மையான மெய்ஞானம் இல்லாத வர்கள் துறவிகளுக்குரிய வேடங்களை அணிந்து கொண்டாலும் அவர்களால் வீடுபேற்றினை அடைய முடியாது. அவர் களுக்கு விதிக்கப்பட்டது நரகமே!

""ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்''

சிவஞானத்தை உணர்ந்தவர்கள் எத்தகைய துறவு வேடத்தையும் அணியவில்லை எனினும், அவர்களே உண்மையான துறவிகள். அவர்களுக்கே வீடுபேறு எனும் பெரும் பாக்கியம் கிடைக்கும். (நன்முத்தர்).

""ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''

தனக்கு உண்மையான சிவஞானம் சித்திக்க வேண்டும் என்று நினைக்கும் துறவிகள் சிவனையே தனது சிந்தனையில் நிறுத்தி அவனே கதியெனக் கிடப்பர். புறவேடங்கள் எதுவும் அவர்களிடம் இருந்தாலும் அவர் களது உள்ளம் உண்மையான துறவு நிலையில் இருக்கும்.

சிவனுக்குரிய பல பெயர்களில் ஒன்று "தக்கன்' என்பது. அதுவே இப்பாடலில் "நக்கன்' எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆக, துறவு என்பது காவி உடை, கமண்டலம் போன்ற வெளிஅடையாளங்களில் (வேடங்களில்) இல்லை. துறவு நிலை என்பது மனம், எண்ணம் சார்ந்த நிலை. ஞானத் தின் பயனாக மனம் பற்றற்ற நிலையை அடைவதே உண்மையான துறவிக்கு அடையாளம்.

"புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயனில்லை

நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள்நண்ணித்

துன்ஞானத்தோர் சமயத் துரிசு உள்ளோர்

பின்ஞானத்தோர் என்றும் பேச கில்லாரே''

-திருமந்திரம் பாடல் எண்: 1653.

இதற்கு முந்தைய பாடலின் கருத்தே இப்பாடலிலும் ஏறக்குறைய வலியுறுத்தப்படுகிறது.

""புன்ஞானத்தார் வேடம் பூண்டும் பயனில்லை''

உண்மையான ஞானம் இல்லாத மூடர்கள் (புன்ஞானத்தார்) தவவேடம் பூணுவதால் எந்தப் பயனும் இல்லை.

""நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்''

உண்மையான சிவஞானம் பெற்றவர்களே நன்ஞானத் தார். இவர்கள் இறைவனது அருளை வேண்டி, அவனையே விரும்பி (நண்ணி) அவனிடத்தில் சரணாகதி அடைந்துவிடுவர். இவர்கள் எந்த வேடமும் பூணும் அவசியம் இல்லை.

""துன்ஞானத்தோர் சமயத்துரிசு உள்ளோர்''

"துரிசு' என்ற சொல்லுக்கு அழுக்கு, அழுக்காறு, பொறாமை என்ற அர்த்தங்கள் உள்ளது. பிற சமயங்களின் மீதும் பொறாமையும், கசப்பும் உள்ளவர்கள் ஞானமுடையவர்களாக இருந்தாலும் அது தீய ஞானம். எனவே அவர்களும் தீயவர்களே (துன்ஞானத்தோர்).

""பின்ஞானத்தோர் என்றும் பேச இல்லாரே''

உண்மையான ஞானிகள் இத்தகையே துன்ஞானத்தாரோடு வாக்கு வாதங்களில் ஈடுபட மாட்டார்கள் (பேச இல்லாரே). திருமூலர் வாழ்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன.

சைவம் பெரியதா, வைணவம் பெரியதா என்ற சர்ச்சைகளும், வாக்கு வாதங்களும், தர்க்கங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், "பிற சமயங்களின்மேல் வெறுப்பு உள்ளவர்கள் துன்ஞானத் தோர்- உண்மையான ஞானம் பெற்ற வர்கள் இவர்களோடு தர்க்கங்களிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார் திருமூலர்.

இதுவே சித்தர்களை பிற துறவி களிடமிருந்தும், சமயக் குரவர்களிட மிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கியமான பண்பு. சித்தம் தெளிந்து சித்தர் நிலையை அடைந்தவர்களிடம் பேச்சு இராது. ஆரவாரங்களோ, ஆர்ப்பரிப்புகளோ இராது. உடலில் உயிர் இருந்தாலும் அவர்கள் "செத்த சவம்போல்' எதிலும் பற்றின்றித் திரிவர்! இறைவனது திருவடிகள் மட்டுமே அவர்கள் மனதை நிறைத்திருக்கும். வேறு எதற்கும் அங்கு இடமிராது. இந்த கருத்தை விளக்கும் ஒரு திருமந்திரம் பாடலைக் காணலாம்.

""கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்

கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்

ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே''

-திருமந்திரம் பாடல் எண்: 1655.

மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களைத் தூக்கிலிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தூக்கிலிட்டுக் கொல்லுவதையே "கழுவேற்றுதல்' என்று அக்காலத்தில் அழைத்தார்கள். தூக்குமரம்- கழுமரம்- இதையே கழுவடி என்கிறார் திருமூலர்.

சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்ட வர்களுக்கு இது கிடையாது. தூக்கிலிடப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது.

"கத்தித்திரிவர் கழுவடி நாய் போல்'

ஒரு மனிதனை கழுவில் ஏற்றத் தயாராகும் போதே, எப்போது நமக்கு உணவு கிடைக்கும் என்ற தவிப்பில் நாய்கள் அந்த கழுமரத்தைச் ஊளையிட்டுக் கொண்டே சுற்றி வருமாம். அவற்றின் இலக்கு- உணவு.

அதுபோலவே போலித் துறவிகளும் "பணம்' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆரவாரமான பேச்சுகளும் பிரசங்கங்கள் என்று கத்தித் திரிவார்களாம்.

அடுத்ததாக இந்த போலி வேடதாரித் துறவிகளை தெருவில் குரளி வித்தை காட்டு பவனுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். குரளி வித்தை காட்டுபவன் தனது பேச்சு சாமர்த்தியத்தால் கூட்டத்தில் இருப்பவர்களைத் தன்வசப் படுத்திவிடுவான்.

தனது பேச்சுத் திறமையால் பல கண்கட்டி வித்தைகளைச் செய்து காட்டி கூட்டத்தினரை மகிழ்விப்பான். ஆனால் அவனது உண்மையான நோக்கம் கூட்டத்தில் இருப்பவர்களின் கைகளில் இருக்கும் பொருளை கொத்திக் கொள்வதே!

அதுபோலவே இந்த போலித் துறவிகளும் பேச்சு, கண்கட்டு வித்தைகள் என பலவற்றைச் செய்து பெருங்கூட்டத்தை தம்மிடம் ஈர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் பிறரிடம் உள்ள பொருளையும், பணத்தையும் தனதாக்கிக் கொள்வதே! இதையே "கொத்தித் திரிவது' என்கிறார் திருமூலர்.

"கொத்தித் திரிவர்' என்ற சொற்களிலும் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. நம் கையிலுள்ள பொருளை ஒருவன் நேராக வந்து பறித்துக் கொள்ள முயற்சிக்கும்போது நாம் எதிர்த்து போராட முடியும். திறமையிருந்தால் நமது பொருளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பருந்து, காக்கை போன்றவையே கொத்திச் செல்லும். நமது தலைக்குமேல் பறந்து கொண்டிருக்கும் இவற்றை நம்மால் கவனிக்க முடியாது. நாம் சற்றே ஏமாந்த வேளையில் இவை சரேரென வந்து நம் கையில் உள்ளதைக் கொத்திக் கொண்டு பறந்துவிடும்.

போலித் துறவிகளும் தாங்கள் சராசரி மனிதர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் (மேலே பறக்கும் பருந்துபோல) என்ற மாயத் தோற்றத்தை தங்களது பேச்சாலும், ஆரவாரங் களாலும், வேடங்களாலும் உருவாக்கி விடுகிறார் கள். நாம் அசந்து நிற்கும் வேளையில் "கொத்திச்' சென்று விடுகிறார்கள்.

பிடுங்கித் திரிவர் அல்லது களவாடுவர் என்ற சொற்களைப் பயன்படுத்தாது "கொத்தித் திரிவர்' என்ற சொற்களை திருமூலர் பயன்படுத்தி யிருப்பதன் சூட்சுமம் இதுதான்.

""ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானியோர்களே''

உடலில் உயிர் இருக்கும். உடல் இயங்கிக் கொண்டிருக்கும். ஐம்புலன்களும் (பொறிகள்) வேலை செய்யும். ஆனாலும் உண்மையான சிவஞான நிலையை அடைந்த சித்தர்களும், துறவிகளும் செத்த பிணம்போலவே திரிந்து கொண்டிருப்பர் என்பதே இந்த இறுதி இரு அடிகளின் பொருளாகும்.

உயிர் இருந்தும் இல்லாததுபோல் எவ்வித உலக நாட்டமும் இன்றி, "சித்தன் போக்கு சிவன் போக்கு' என்று திரிவதே உண்மையான துறவிக்கு அடையாளம். அனைத்தையும் துறந்த- கடந்த இந்த நிலை ஒருவித "ஜீவசமாதி' நிலையாகும்.

""மயல் அற்று இருள்அற்று மாமனம் அற்றுக்

கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று 

தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்

செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'

-திருமந்திரம் பாடல் எண்: 1662.

"மெய்யான சிவஞானிகள் செயல் அற்று இருப்பர்' என்பதையே இந்தப் பாடலும் கூறு கிறது. ஒவ்வொரு அடியாகப் பொருள் காணலாம்.

"மயல் அற்று இருள் அற்று மாமனம் அற்றுக்'

"மயல்' என்பது மன மயக்கங்களைக் குறிக் கிறது. உண்மையான ஞானம் பெற்ற சிவனடி யாராகிய துறவிகளிடம் "மன மயக்கம்' என்பது அறவே இராது. உலக இச்சைகளிலும் ஆசா பாசங்களிலும் மனம் செல்லாது. தெளிந்த நீரோடை போன்ற மனநிலை இருக்கும்.

இறைவன் ஜோதி வடிவானவன். இறைவன் ஜோதி வடிவாக உடலினுள் குடிகொள்ளும் போதுதான் உண்மையான ஞானம் உருவாகும். இந்த ஜோதி உள்ளே இருப்பதால் உண்மையான துறவிகள் மனதில் இருள் என்பதே இராது. இதையே "இருள் அற்று' என்கிறார் திருமூலர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அக இருள் அகலும்போது, முகமும், உடலும் பிரகாசமாகும். இதையே "தேஜஸ்' என்கிறோம். உண்மை யான துறவிகளிடம் இதைக் காணலாம்.

மனம் என்பதற்கும் மேலானது நமது "தான்' எனும் அகங்காரம். இதையே ஈகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்த அகங்காரமே ஞானப் பாதையின் மிகப் பெரிய தடைக்கல், மெய்ஞானம் அடைந்த ஞானிகளிடமும், துறவிகளிடமும் இந்த "மாமனம்' எனும் அகங்காரம் அழிந்து போகும்.

"கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று'

மீன் போன்ற கண்களையுடைய பெண்களின் கைகளைத் தழுவி, அவரோடு உறவு கொள்ளும் செயலும் உண்மைத் துறவு நிலையில் அறுந்து போகும். துறவுக்கான முக்கியமான இலக்கணங்களில் இதுவும் ஒன்று. இந்த விஷயத்தில்தான் இன்று பல போலித் துறவிகள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

"தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்'

"தையல்' என்பது பெண் என்பதைக் குறிக்கும். "தையல்' என்பதே இங்கு "தயல்' என்றாயிற்று. "தையல் உற்றவர்' என்றால் உமையை தனது உடலின் சரிபாகமாகக் கொண்ட சிவன்- உமையொரு பாகன்- அர்த்த நாரீஸ்வரன். உண்மைத் துறவிகள் "நான் என்ற அகங்காரம் அழிந்த நிலையில் சிவனோடு ஒன்றாகிவிடுவர். (தாமே தாமாகி). தான் வேறு; சிவன் வேறு என்றில்லாத இறை நிலையை அடைந்தவர்களே உண்மையான துறவிகள்.

"செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'

இறைவனோடு ஒன்றிய நிலையில் இருப்பவர்கள் செயல் அற்ற நிலைக்கு வந்து விடுவார்கள். ஆரவாரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, பிரசங்கங்களோ இராது.

செயல் அற்று இருப்பது என்பது சும்மா சோம்பியிருப்பது அல்ல. "எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன்- இயங்குவது நான்' என்ற நிலை. எல்லையற்ற ஆனந்த நிலை! இதுவே உண்மைத் துறவியின் அடையாளம்!