Translate

புதன், 15 ஜனவரி, 2014

ஜோதிடம்,நாடிஜோதிடம்,ஜீவநாடி - விளக்கம்


ஜோதிடம் :
நமது வேதங்கள் நான்கு ஆகும். அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் ஆகும். இந்த வேதங்களுக்கு கண்கள் என வர்ணிக்கப்படுவது சிட்சை, வியாகரணம், சந்தாஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பனவாகும். "ஜ்யோதிஷம்" என்பதில் ஜ்யோதி என்றால் சூரியன். சூரியன் இல்லையென்றால் இந்த பிரபஞ்சமே இல்லை.சூரியனை நடுநாயகமாக கொண்டுதான் நாம் வாழும் பூமி மற்றும் அனைத்து கிரகங்கள், நட்சத்திரங்களின் இயக்கமே நடைபெ
ற்று வருகிறது.
ஜோதிடம் = ஜோதி + திடம் . ஜோதி என்றால் ஒளி, திடம் என்றால் உறுதியான, ஒரு மனிதனின் வாழ்வில் உறுதியான ஒளிவிளக்கை ஏற்றி வைக்கும் கலையே ஜோதிடம் ஆகும். மனிதன் ஜனனமாகும் வேளையை கொண்டு பிறப்பு ஜாதகம் எழுதப்படுகிறது. அதனை கொண்டு அந்த மனிதனின் முக்கால பலன்களை தெள்ளத் தெளிவாக அறிய முடியும்.
நாடிஜோதிடம் :


பழங்கால ஓலைசுவடிகளை வைத்துக்கொண்டு ஜோதிடகலையை நன்கு கற்றுணர்ந்த நபர்கள் நம்மிடமே உங்களின் பெயர் இந்த எழுத்துக்களில் வருகிறதா, இல்லை தனி பெயரா, கூட்டு பெயரா என்பது போன்ற கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு பின் அவைகளை சித்தர் பாடல்கள் போல தொகுத்து நம் ஜாதக பலன்களை அந்த பாடல்களில் கோர்வையாக்கி பலன் சொல்லும் தந்திரமே நாடி ஜோதிடம் ஆகும். எனக்கும் நாடிஜோதிடம் படிக்கும் நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்கள் சொன்ன உண்மை இது. அவர்கள் என்னை மன்னிக்கவும். நாடி ஜோதிடம் சொல்லித் தரும் பயிற்சி மையங்களும் உண்டு. சித்தர்கள் எழுதிய ஒரு பாடல்களில் கூட அவர்கள் நாடிஜோதிடம் பற்றி ஒரு வரி கூட எழுதாததை கொண்டே நாடிஜோதிடத்தை போலி என்றே சொல்லலாம்.


ஜீவநாடி ஜோதிடம்  :

ஜீவநாடி என்பது சித்தர்களும், மகரிஷிகளும் இயற்றியதாகும், இதனை காகபுஜண்டர், சுகர்மகரிஷி, அகத்தியர் போன்ற சித்தர்களின் பாடல்களில் இருந்தே நாம் உண்மை என அறியலாம். ஜீவநாடி ஓலைசுவடி என்பது உண்மை. ஜீவன் என்றால் உயிர், ஜீவிதம் என்றால் வாழ்க்கை. மனிதனின் வாழ்க்கை சிக்கல்களுக்கு உடனடி தீர்வினை தரும் வகையில் நம் மேல் கருணைகொண்டு சித்தர்கள் இயற்றி வைத்ததே ஜீவநாடி ஆகும்.



                நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பக்தர்களின் நலனுக்காக நந்தி மற்றும் அகத்தியர் ஜீவ நாடி வாசித்து பலன்கள் சொல்லப்படுகிறது.முன்பதிவு செய்ய ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை பின்வரும் அலைப்பேசி எண்களில் அழைக்கவும். செல் : 99440 99980, 85260 74891.