வேங்கை மரமும் சில உண்மைகளும் என்ற தலைப்பில் வேங்கை மரம் எத்தனை வழிகளில் எந்தெந்த வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது என்பதனை பற்றி நாம் ஆராய இருக்கிறோம்.
வேங்கை மரம் நவ கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.
வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.