Translate

திங்கள், 25 நவம்பர், 2013

தோஷங்கள் உண்டாக காரணங்கள்

                 
                    தோஷங்கள் உண்டாக காரணங்கள் என்ற இந்த கட்டுரையில் ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக தோஷங்கள் எப்படி உண்டாகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

              நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை பெற்று நாம் பிறக்கிறோம். இந்த வினைப்பதிவை தானும் தனது வம்சாவழியினரும்  அனுபவித்தே தீரவேண்டும். இந்த கர்மப் பலனில் நன்மையையும் இருக்கும், தீமையும் இருக்கும், இந்த வினைப்பதிவின் சாரமே சஞ்சித கர்மம்.

                 இப்பிறப்பில் வாழும் காலத்தில் ஏற்று செய்யும் தொழிலின்                        ( கர்மத்தின் ) பால் நாம் பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகளை  குறிப்பது பிராப்த கர்மம்.

                   மனிதன் புற இச்சைகளில் மயங்கி தன் ஐம்புலன்களால் தொடர்ந்து செய்து வரும் காரியங்களின் வினைப்பதிவு ஆகாமிய  கர்மம்.

               கருவமைப்பின் வழி வந்த வினைப்பதிவு சஞ்சிதமாம் 
               உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தம் 
               இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
               ஒருவினையும் வீண் போக உள்ளடங்கி பின் விளைவாம்.
                                                                          -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 
               
     தோஷங்கள் உண்டாக காரணங்கள் இந்த மூன்று வகையான கர்மங்கள் ஆகும். அவை 1. சஞ்சித கர்மம், 2.பிராப்த கர்மம், 3.ஆகாமிய கர்மம். கருவின் வழியில் வரும் சஞ்சித கர்மமும், உடலெடுத்த பின் தொழிலால் வரும் பிராப்த கர்மமும், இவ்விரண்டும் சேர்ந்து செயலாற்றும் போது விளையும் ஆகாமிய கர்மமும், இவ்வகையில் மூன்றும் தோன்றியபின் அந்த கர்மங்களின் பலனால் ஜாதகருக்கு நன்மை - தீமைகள் நடைபெறும்.

   இந்த மூன்று கர்மங்களால் விளையும் நற்பலன்களை ஜாதகத்தில் யோகமென்றும், தீய பலன்களை ஜாதகத்தில் தோஷம் என்றும் வகைப் படுத்துகிறோம்.