Translate

வியாழன், 15 மே, 2014

ஜோதிடம் - கால புருஷ இராசிகள்

             காலப் புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம, மோட்ச இராசிகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்கள் எந்த வகையில் யாருக்கு செய்தோம். அதன் விளைவாக இந்த பிறவியில் நாம் என்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்க போகிறோம் என்பதனை இந்த காலப்புருஷ இராசிகளை கொண்டு நாம் அறிய முடியும். இதில் எந்த இராசிகள் எந்த தத்துவத்தை குறிக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


தர்ம இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு இராசிகள் 

தர்மத்தில் இருவகை உண்டு. அவை நல்ல தர்மம், கெட்ட தர்மம். உதாரணமாக ஒரு கோவிலில் திருவிழா நடக்கிறது, அந்த விழாவில் ஒருவர் அன்ன தானம் செய்தார் இது நல்ல தர்மம். ஒருவர் ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் இது கெட்ட தர்மம். அதாவது நாம் செய்யும் தர்மம் ஒருவரை வாழ வைப்பதாக, நல்வழி படுத்துவதாக அமைந்தால் அது நல்தர்மம் அதனால் அவர் நல்ல பலன்களையும் ஜாதகத்தில் யோகங்களையும் பெற்று வாழ்வார். அதேபோல் மற்றவரை தீய வழியில் செலுத்தும் ஆபாச நடனம் நடத்தியவர் அதன் பலனாக கெடு பலன்களையும் ஜாதகத்தில் அதற்குரிய தோஷங்களையும் பெற்று வாழ்வில் துன்பப்படுவார்.

கர்ம இராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம் இராசிகள் 

கர்மம் என்பது நாம் செய்யும் தொழிலை குறிக்கும், பிறருக்கு தீங்கு தராத வண்ணம் நமது தொழிலை செய்தால், நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு நன்மைகள் செய்தால், நாம் செய்யும் தொழிலை நியாய தர்மத்துடன் செய்தால் அதன் பலனாக நல்ல ஜாதக யோகத்தினையும், அதனால் நல்ல பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வினையும் அடையலாம். அதேபோல் தர்ம நியாங்களை மறந்து நாம் செய்யும் தொழிலால் பிறருக்கு தீமைகளை செய்து பணம் ஈட்டினால் அதன் விளைவாக கெடு பலன்களையும், ஜாதக ரீதியில் கொடிய தோஷங்களையும் பெற்று துன்பப்பட்டு வாழவேண்டி நேரும்.

காம இராசிகள் : மிதுனம், துலாம், கும்பம் இராசிகள் 

காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். நம் ஆசைகளிலே நல்லதும் உண்டு, தீய ஆசைகளும் உண்டு. நான் நியாயமான வழியில் தர்ம வழியில் உழைத்து பெரும் செல்வம் ஈட்டி என் குடும்பத்தை நல்ல விதமாக வாழ வைப்பேன் என்பது நல்ல காமம் (ஆசை). நான் எப்பாடு பட்டாவது அடுத்தவன் மனைவியை அடைந்தே தீருவேன் இது கெட்ட காமம் (ஆசை).

மோட்ச இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம் இராசிகள் 

நம்மை பெற்றெடுத்த தாய் - தந்தை, பாட்டன் - பாட்டி போன்ற பெரியோர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்ல விதமாக வாழவைத்து, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்து, அவர்கள் இறந்த பிறகும் செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் முதலிய காரியங்களை செய்வது அவர்கள் மோட்சமடைய வழிவகையான நல்மோட்சம். அதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை உதாசீனப் படுத்துவது, உன்ன உணவுஇன்றி தவிக்கவிடுவது, அவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகளை செய்யாமல் நோயால் துன்பமடைய செய்வது, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்யாமல் விடுவது, இறப்புக்கு பின்பு திதி தர்ப்பணங்களை செய்யாமல் விடுவது போன்ற செயல்களை செய்வதால் நம் முன்னோர்களின் ஆன்மா மோட்சமடையாமல் இருக்க வழிவகை செய்வதாகும் இதனால் நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி வாட்டும் இதுவே துர்மோட்சம் ஆகும்.

மேலே கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் கடந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இந்த பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் நாம் கடந்த பிறவியில் அந்த இராசிகளின் காரக பலனில் நாம் செய்த பாவம் என்று அறிக. அந்த பாவங்களால் உண்டாகி நம்மை வாட்டும் தோஷங்களை தகுந்த பரிகாரங்கள் செய்து சரிப்படுத்தி கொள்ளலாம்.

ஜோதிடம் - கால புருஷ தத்துவம்

       
ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புன்னியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்க போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

             ஜோதிட சாஸ்திரம் 12 இராசிகளையும் சர, ஸ்திர, உபய இராசிகள் என்று வகுத்துள்ளது. இதில் சர இராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகும். ஸ்திர இராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகும். உபய இராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகும். இதில் சர இராசி இந்த பிறவியின் தன்மையை காட்டும், ஸ்திர இராசிகள் சென்ற பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளை காட்டும். உபய இராசிகள் அடுத்த பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் நன்மை தீமைகளை காட்டும். ஒரு ஜாதகர் தான் பிறந்த லக்னத்தை கொண்டு தனக்கு நடக்கும் பலன்களை எடை போட முடியும். சர லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகளின் பலனை இந்த பிறவியிலேயே அனுபவிப்பர், ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள் போன பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் பலனை இந்த பிறவியில் அனுபவிப்பர், உபய லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பர், என்று காலப் புருஷ தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, இதனால் தான் நல்லவர்களுக்கு கேட்ட பலனும், துன்பமான வாழ்வும், அதுபோல கேட்டவர்களுக்கு நல்லபலனும் இன்பமான வாழ்வும் அமைந்துவிடுகிறது. இந்த காலப்புருஷ தத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானது மாற்ற இயலாத ஒன்றாகும். காலப்புருஷ தத்துவப்படி நமது ஜாதகத்தினை ஆராய்ந்து நாம் அடைய உள்ள நல்ல தீய பலன்களை அறிந்து கொள்ளலாம். நாம் காலப்புருஷ தத்துவப்படி கேடுப்பலனை அடையவேண்டி வந்தால் அதற்க்கான பரிகாரங்களை செய்துகொள்வதன் வாயிலாக நம் கஷ்டங்களை சிரமங்களை போக்கிக்கொள்ளலாம், நல்ல பலன்களை அதிகப்படுத்தி கொள்ளலாம், இந்த காலப்புருஷ தத்துவத்தினை மாற்றும் பரிகாரங்கள் ஒருநாளில் செய்துகொள்வதல்ல, தகுந்த குருவின் ஆலோசனைப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே இதன் பலனை அடைய முடியும்.

சனி, 10 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்

                    சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த கிழமைகளில் அந்த காரியங்களை செய்ய ஆரம்பித்தால்  உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு கிழமையில் மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 

1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 

8. மாரணம்                           -       சனி  

          மேலே சொல்லிய கிழமைகளில்  அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம் என்று சித்தர்கள் சொல்லி சென்றனர்.

வெள்ளி, 9 மே, 2014

அஷ்ட கர்மங்களுக்கு உண்டான திசைகள்

                    சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு திசையை பார்த்து அமர்ந்து மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான திசைகள் பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 

1. வசியம்                            -      கிழக்கு 

2. தம்பனம்                         -       தென்மேற்கு 

3. மோகனம்                       -       தெற்கு 

4.  உச்சாடனம்                   -       மேற்கு 

5. பேதனம்                           -        வடக்கு 

6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 

7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 

8. மாரணம்                           -        தெற்கு 

          மேலே சொல்லிய திசைகளை நோக்கி அமர்ந்து கொண்டு அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.